• Apr 02 2025

​மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி! - நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம்

Chithra / Mar 29th 2024, 8:03 am
image

பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ச போன்று மொட்டுக் கட்சியை வலுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30ஆம் திகதி மொட்டுக் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை தங்காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

​மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி - நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம் பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ச போன்று மொட்டுக் கட்சியை வலுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30ஆம் திகதி மொட்டுக் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை தங்காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement