• Sep 20 2024

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாமல் பதில்...!

Sharmi / Aug 1st 2024, 8:24 am
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தொடர்பிலான அறிவிப்பு  வெளியாகும் தினம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவ சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கடந்த திங்கட்கிழமை அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்ததாகவும், இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதால் அடுத்த வாரத்திற்குள் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாமல் பதில். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தொடர்பிலான அறிவிப்பு  வெளியாகும் தினம் பிற்போடப்பட்டுள்ளது.இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவ சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கடந்த திங்கட்கிழமை அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்ததாகவும், இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுனவினர் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதால் அடுத்த வாரத்திற்குள் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement