• Jan 08 2025

மொட்டு கட்சியை பலப்படுத்த நாமல் தீவிர முயற்சி - 2025ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள மாற்றம்!

Chithra / Dec 29th 2024, 8:27 am
image


எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், 

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும்  நாமல் ராஜபக்ச  குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியை பலப்படுத்த நாமல் தீவிர முயற்சி - 2025ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள மாற்றம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும்  நாமல் ராஜபக்ச  குறிப்பிட்டுள்ளார்.கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement