தேசிய கண் வைத்தியசாலையின் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயரூவன் பண்டாரவுக்கு சமையலறை பணியாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை தொடர்பில் சமையலறை பணியாளர்கள் இருவரை அழைத்து அவர் நேற்று முன்தினம் விசாரணை நடத்திய நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் வைத்தியசாலையின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவ்வாறு உணவுகள் வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வைத்தியர் ஜயரூவன் பண்டார, இது தொடர்பில் சுகாதார அமைச்சினூடாக விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தேசிய கண் வைத்தியசாலை பிரதி பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் தேசிய கண் வைத்தியசாலையின் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயரூவன் பண்டாரவுக்கு சமையலறை பணியாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விற்பனை தொடர்பில் சமையலறை பணியாளர்கள் இருவரை அழைத்து அவர் நேற்று முன்தினம் விசாரணை நடத்திய நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் வைத்தியசாலையின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறு உணவுகள் வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வைத்தியர் ஜயரூவன் பண்டார, இது தொடர்பில் சுகாதார அமைச்சினூடாக விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.