• Apr 03 2025

தீக்கிரையான தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம்

Chithra / Aug 29th 2024, 8:13 am
image


மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

அத்தோடு குறித்த கட்டடமும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ வைத்த நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 

அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீக்கிரையான தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுஅத்தோடு குறித்த கட்டடமும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ வைத்த நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement