• Jun 17 2024

மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பு - மக்கள் அமோக வரவேற்பு!

Tamil nila / May 25th 2024, 8:57 pm
image

Advertisement

மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு  இன்றைய தினம் சனிக்கிழமை(25) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.

இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரமாண்ட வரவேற்பு வழங்கினர்.

குறித்த மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



குறித்த நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்ட மக்கள் தேசிக மக்கள் சக்திக்கும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸ்ஸ்னாயவுக்கும் ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.





மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பு - மக்கள் அமோக வரவேற்பு மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு  இன்றைய தினம் சனிக்கிழமை(25) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரமாண்ட வரவேற்பு வழங்கினர்.குறித்த மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்ட மக்கள் தேசிக மக்கள் சக்திக்கும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸ்ஸ்னாயவுக்கும் ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement