அனுராதபுரம் - இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட குழுவினர் தாக்கியதில் காயமடைந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலுத்புலியங்குளம், விஜிதபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர்.
குழுவொன்று தம்மைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறி கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த தம்பதியினர், மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெண்ணின் காதுப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கணவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு தலை மற்றும் கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பலோகம, ஹிரிபிட்டியாகம விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்பலோகம பிரதேச சபையின் புத்தாண்டு விழாவின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்பலோகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இப்பலோகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் வெறியாட்டம் - தம்பதியினர் மீது கொடூர தாக்குதல் அனுராதபுரம் - இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட குழுவினர் தாக்கியதில் காயமடைந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அலுத்புலியங்குளம், விஜிதபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர். குழுவொன்று தம்மைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறி கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த தம்பதியினர், மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பெண்ணின் காதுப் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கணவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு தலை மற்றும் கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்பலோகம, ஹிரிபிட்டியாகம விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்பலோகம பிரதேச சபையின் புத்தாண்டு விழாவின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இப்பலோகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளதாக இப்பலோகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.