கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,
இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கிறோம்.
இச்சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளை, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் அதே முறையில் எடுப்போம்.
குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, அதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒருவருடைய தராதரத்தைப் பார்த்து எடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு இன்னொரு சட்டமும் செயல்பட இடமில்லை.
யாராவது சட்டவிரோதமாகச் செயல்பட்டால், அதில் தலையிட்டு அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரவித்தார்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்-பிக்குகள் போதை பொருள் கடத்தல் தொடர்பில் ஆனந்த விஜேபால தெரிவிப்பு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.இவர் மேலும் தெரிவிக்கையில்,இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கிறோம்.இச்சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளை, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் அதே முறையில் எடுப்போம். குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, அதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒருவருடைய தராதரத்தைப் பார்த்து எடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு இன்னொரு சட்டமும் செயல்பட இடமில்லை. யாராவது சட்டவிரோதமாகச் செயல்பட்டால், அதில் தலையிட்டு அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரவித்தார்.