• Sep 19 2024

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா!

Tamil nila / Jan 6th 2023, 10:25 pm
image

Advertisement

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா இன்றைய தினம் வாகரை புச்சாக்கேணியில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.

 


தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் முதன்முறையாக இத்தேசிய பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது.



ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர்களான சதீஸ் மற்றும் லதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இப் பொங்கல் விழாவில் கட்சியின் செயலாளர் இ.கதிர், தேசிய ஒருங்கிணைப்பாளரும், பேச்சாளருமான க.துளசி, வாகரைப் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கோணலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் நவமேனன் உட்பட கட்சியின் மாவட்ட மட்ட பிரதிநிதிகள், உறுப்பினர்கள், போராளிகள் குடும்ப உறவுகள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



ஆரம்ப நிகழ்வாக புச்சாக்கேணி செந்தூர் முருகன் ஆலயத்தில் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகளினால் எழுச்சியுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா இன்றைய தினம் வாகரை புச்சாக்கேணியில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் முதன்முறையாக இத்தேசிய பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது.ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர்களான சதீஸ் மற்றும் லதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இப் பொங்கல் விழாவில் கட்சியின் செயலாளர் இ.கதிர், தேசிய ஒருங்கிணைப்பாளரும், பேச்சாளருமான க.துளசி, வாகரைப் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கோணலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் நவமேனன் உட்பட கட்சியின் மாவட்ட மட்ட பிரதிநிதிகள், உறுப்பினர்கள், போராளிகள் குடும்ப உறவுகள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.ஆரம்ப நிகழ்வாக புச்சாக்கேணி செந்தூர் முருகன் ஆலயத்தில் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகளினால் எழுச்சியுரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement