• Feb 07 2026

தேசிய பாடசாலை ஆசிரியர்–பிள்ளை ஒன்றியத்தின் போராட்டம்!

dileesiya / Feb 5th 2026, 3:21 pm
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்த தேசிய பாடசாலை ஆசிரியர்–பிள்ளை ஒன்றியம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது

தேசிய பாடசாலைகளில் 3 வருட சேவையை பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சலுகை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் 2025 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போதிலும், இதுவரை எவ்விதத் தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தமது பிரச்சினைக்கு எழுத்துப்பூர்வமான தீர்வை வலியுறுத்தி தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. 

குறிப்பாக, போராட்டத்தில் பலர் தமது பிள்ளைகளுடனும் கலந்துகொண்டுள்ளதுடன், தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் தமது பிள்ளைகளுடனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ள

தேசிய பாடசாலை ஆசிரியர்–பிள்ளை ஒன்றியத்தின் போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்த தேசிய பாடசாலை ஆசிரியர்–பிள்ளை ஒன்றியம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதுதேசிய பாடசாலைகளில் 3 வருட சேவையை பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு, தமது பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சலுகை எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் 2025 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போதிலும், இதுவரை எவ்விதத் தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.இவ்வாறானதொரு பின்னணியில், தமது பிரச்சினைக்கு எழுத்துப்பூர்வமான தீர்வை வலியுறுத்தி தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, போராட்டத்தில் பலர் தமது பிள்ளைகளுடனும் கலந்துகொண்டுள்ளதுடன், தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் தமது பிள்ளைகளுடனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ள

Advertisement

Advertisement

Advertisement