• Sep 20 2024

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 7:57 am
image

Advertisement

மின்கட்டணத்திற்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின் பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம். மின் கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும். இவ்வாறு துறைமுகம் , பெற்றோல் மற்னும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடு செய்வதற்காக இவ் வருடத்தில் மேலதிகமாக 288 மில்லியன் ரூபாவை திரட்டிக்கொள்ள உத்தேசித்துள்ளது.  கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாகச் செயற்படுதில்லை. தன்னிச்சையாக் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 


தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம் ., பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம். தொழிற்சங்கப் போராட்டத்திற்கு நிட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்றார்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் SamugamMedia மின்கட்டணத்திற்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின் பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம். மின் கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும். இவ்வாறு துறைமுகம் , பெற்றோல் மற்னும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடு செய்வதற்காக இவ் வருடத்தில் மேலதிகமாக 288 மில்லியன் ரூபாவை திரட்டிக்கொள்ள உத்தேசித்துள்ளது.  கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாகச் செயற்படுதில்லை. தன்னிச்சையாக் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம் ., பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம். தொழிற்சங்கப் போராட்டத்திற்கு நிட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement