• Feb 07 2026

புதுவருடத்தில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - பலர் கைது!

Chithra / Jan 2nd 2026, 1:35 pm
image

 

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


அதற்கமைய, 27,564 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 535 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், 16 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 98 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 96 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 501 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 30 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,133 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவருடத்தில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - பலர் கைது  பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய, 27,564 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 535 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 16 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 98 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 96 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 501 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 30 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,133 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement