யாழில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் கடலட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் இன்று(15) கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது
கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையால் கைது. யாழில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் கடலட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் இன்று(15) கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.