இலங்கை கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது டி56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலிகேன, கல்பொல காலனியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சந்தேகநபர் பொறுப்பேற்றிருந்த கொழும்பு துறைமுகத்தின் ரன்வல முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து 2021 இல் காணாமல் போன குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிப்பாய், மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டி56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் கைது இலங்கை கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது டி56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலிகேன, கல்பொல காலனியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சந்தேகநபர் பொறுப்பேற்றிருந்த கொழும்பு துறைமுகத்தின் ரன்வல முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து 2021 இல் காணாமல் போன குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிப்பாய், மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.