• Apr 17 2026

நாவலப்பிட்டி அரச பேருந்து சேவையில் ஈடுபடவில்லை - மக்கள் அவதி!

Ziya / Feb 25th 2026, 5:38 pm
image

டயகம - கண்டி மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு வந்த நாவலப்பிட்டி பஸ் பேருந்து நிலையத்திற்கு சொந்தமான  அரச பேருந்து கடந்த இரு தினங்களாக சேவையில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


இந்த அரச பேருந்து சேவைகள் குறித்த பேருந்து தினமும் அதிகாலை 5 . 30 மணிக்கு டயகம  நகரில் இருந்து புறப்பட்டு தலவாக்கலை நாவலப்பிட்டி  ஊடாக காலை 10:30 மணியளவில் கண்டி நகரத்தை நோக்கி பயணிக்கும் அதே போல் மீண்டும் மாலை 7 மணிக்கு டயகம விற்கு சென்றடையும்.  


குறித்த அரச பேருந்து சேவை இடம் பெறுவதன் காரணமாக காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் நோயாளிகள் கண்டி கம்பளை பேராதனை நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்திய சாலைக்கு செல்லும் பயனாளிகள் உட்பட பொதுமக்கள் பலரும் பல்வேறு பயன்களை பெற்று வருகின்றனர். 


எனவே குறித்த பேருந்து சேவையை தொடர்ச்சியாக சேவையில் ஈடு படுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கேட்டு கொள்கின்றனர். 


இவ்விடயம் தொடர்பில்  நாவலப்பிட்டி அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, சாரதி பற்றாக்குறை காரணமாக பஸ் சேவையை தொடர்வதில் சிக்கல் உள்ளதாக கூறுகின்றார்

நாவலப்பிட்டி அரச பேருந்து சேவையில் ஈடுபடவில்லை - மக்கள் அவதி டயகம - கண்டி மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு வந்த நாவலப்பிட்டி பஸ் பேருந்து நிலையத்திற்கு சொந்தமான  அரச பேருந்து கடந்த இரு தினங்களாக சேவையில் ஈடுபடவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரச பேருந்து சேவைகள் குறித்த பேருந்து தினமும் அதிகாலை 5 . 30 மணிக்கு டயகம  நகரில் இருந்து புறப்பட்டு தலவாக்கலை நாவலப்பிட்டி  ஊடாக காலை 10:30 மணியளவில் கண்டி நகரத்தை நோக்கி பயணிக்கும் அதே போல் மீண்டும் மாலை 7 மணிக்கு டயகம விற்கு சென்றடையும்.  குறித்த அரச பேருந்து சேவை இடம் பெறுவதன் காரணமாக காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் நோயாளிகள் கண்டி கம்பளை பேராதனை நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்திய சாலைக்கு செல்லும் பயனாளிகள் உட்பட பொதுமக்கள் பலரும் பல்வேறு பயன்களை பெற்று வருகின்றனர். எனவே குறித்த பேருந்து சேவையை தொடர்ச்சியாக சேவையில் ஈடு படுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கேட்டு கொள்கின்றனர். இவ்விடயம் தொடர்பில்  நாவலப்பிட்டி அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, சாரதி பற்றாக்குறை காரணமாக பஸ் சேவையை தொடர்வதில் சிக்கல் உள்ளதாக கூறுகின்றார்

Advertisement

Advertisement

Advertisement