• May 19 2026

சுகாதார சீர்கேட்டில் கினிகத்தேன பேருந்து நிலையம் - கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி

Chithra / May 18th 2026, 12:26 pm
image

கினிகத்தேன நகரில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரச பேருந்து நிலையம் தற்போது பாரிய சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரத்தின் கீழ் இயங்கும் இந்த பேருந்து நிலையத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தரித்து செல்வதுடன், நாட்டின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.


குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பயணிகள் உள்ளிட்ட பலர் தினமும் இந்த நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் வர்த்தக நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில், பேருந்து நிலையத்தின் இரண்டாம் மாடியில் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் பறவைகளின் எச்சம் மற்றும் மனிதர்களின் வெற்றிலை எச்சில் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பிரச்சினைகளும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள், நடத்துநர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதார பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனவே, இந்த பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


சுகாதார சீர்கேட்டில் கினிகத்தேன பேருந்து நிலையம் - கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி கினிகத்தேன நகரில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரச பேருந்து நிலையம் தற்போது பாரிய சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரத்தின் கீழ் இயங்கும் இந்த பேருந்து நிலையத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தரித்து செல்வதுடன், நாட்டின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பயணிகள் உள்ளிட்ட பலர் தினமும் இந்த நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் வர்த்தக நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், பேருந்து நிலையத்தின் இரண்டாம் மாடியில் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் பறவைகளின் எச்சம் மற்றும் மனிதர்களின் வெற்றிலை எச்சில் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பிரச்சினைகளும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள், நடத்துநர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதார பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, இந்த பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement