• May 18 2026

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை

Chithra / May 18th 2026, 12:16 pm
image

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, "தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு" கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. 


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, "தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு" கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement