• Nov 28 2024

ரணில் - சஜித் இணைவு தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை..!

Sharmi / Nov 28th 2024, 9:45 am
image

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் அவருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை 'ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். 

இரு அணிகளும் இணைந்திருந்த தரப்புகள் தான்.

எம்முடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையலாம். ஐ.தே.கவின் தலைமைப்பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டாலும் அது பற்றி பரிசீலிக்கமுடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எமது பயணம். ஐ.தே.கவுடன் இணைந்துள்ள ஏனைய தரப்புகளுடன் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். 

ரணில் - சஜித் இணைவு தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் இணைந்து பயணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கருத்து தெரிவிக்கையில்,ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் இந்தியா சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் அவருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை 'ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இரு அணிகளும் இணைந்திருந்த தரப்புகள் தான்.எம்முடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையலாம். ஐ.தே.கவின் தலைமைப்பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டாலும் அது பற்றி பரிசீலிக்கமுடியும்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எமது பயணம். ஐ.தே.கவுடன் இணைந்துள்ள ஏனைய தரப்புகளுடன் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement