தைவான் இராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க இன்று (28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.
தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வாறு இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே இராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து அந்தத் தகவலை வெளியிட்டனர்.
தைவான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றும் அதன் அதிபர் லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ என்றும் சீனா கூறிவருகிறது.
ஆனால், தைவானின் வருங்காலம் குறித்து அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.
சீனாவை முந்திக்கொண்டு தைவான் ஆகாய போர்ப் பயிற்சி தைவான் இராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க இன்று (28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.தைவான் அதிபர் லாய் சிங்-டே இவ்வாறு இறுதியில் அமெரிக்கா வழியாக பசிபிக் வட்டாரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் வேளையில் அந்தத் தற்காப்புப் பயிற்சி நடைபெற்றுள்ளது.அந்தப் பயணத்தை மனதில்கொண்டு இன்னும் ஒருசில நாள்களில் தைவான் அருகே இராணுவப் பயிற்சியை சீனா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.தைவானையும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தையும் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், நிலைமையை ஆராய்ந்து அந்தத் தகவலை வெளியிட்டனர்.தைவான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்றும் அதன் அதிபர் லாய் ஒரு ‘பிரிவினைவாதி’ என்றும் சீனா கூறிவருகிறது.ஆனால், தைவானின் வருங்காலம் குறித்து அதன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அதிபர் லாய் தெரிவித்துள்ளார்.