நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருவெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படும் 320 இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மீட்புப் பணிக்காக 11 பேர் கொண்ட இந்திய குழு காத்மாண்டு சென்றடைந்தது. இதனிடையே வெள்ளத்தில் இருந்து தப்பிய சுமார் ஒரு லட்சம் பேர் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய 4,451 பேர் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள பிரதமர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துஞ்சே, திரிசூலி, திமுரே மற்றும் சியாப்ருபேசி போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 517 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.
நேபாள ராணுவம் மற்றும் போலீஸ் படையைச் சேர்ந்த 15,431-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் இருந்து இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
எனினும், இந்தியாவில் மீட்கப்பட்டுள்ள 7 சடலங்களும் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
நேபாள பெரு வெள்ளம் - பலி எண்ணிக்கை 616-ஆக அதிகரிப்பு இந்திய நதிகளில் மிதந்த 7 சடலங்கள் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெருவெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படும் 320 இந்தியர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மீட்புப் பணிக்காக 11 பேர் கொண்ட இந்திய குழு காத்மாண்டு சென்றடைந்தது. இதனிடையே வெள்ளத்தில் இருந்து தப்பிய சுமார் ஒரு லட்சம் பேர் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய 4,451 பேர் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள பிரதமர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துஞ்சே, திரிசூலி, திமுரே மற்றும் சியாப்ருபேசி போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 517 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.நேபாள ராணுவம் மற்றும் போலீஸ் படையைச் சேர்ந்த 15,431-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் இருந்து இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார்.வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட சடலங்கள் யாருடையவை என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.எனினும், இந்தியாவில் மீட்கப்பட்டுள்ள 7 சடலங்களும் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.