• Dec 12 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக புத்தர் சிலை : நடவடிக்கையெடுக்க கோரிக்கை

Tharmini / Dec 12th 2024, 10:21 am
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள்,தாதியர்கள்,வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக புத்தர் சிலை : நடவடிக்கையெடுக்க கோரிக்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள்,தாதியர்கள்,வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement