• Jul 08 2024

புதிய பஸ் கட்டண திருத்தம்...!பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள்...!

Sharmi / Jul 5th 2024, 9:10 am
image

Advertisement

புதிய பஸ் கட்டண திருத்தம் காரணமாக பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையில் தினமும் முரண்பாடுகள் ஏற்படுவதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டணத்தை அறவிடும்போது பஸ் நடத்துனர்களிடம் சில்லறை நாணயங்கள் இல்லாததே இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஒவ்வொரு பயணிகள் பஸ்ஸுக்கும் மத்திய வங்கி நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சில்லறைப் பணத்தை வழங்கினால் இந்த நிலைமை குறையும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசித்து இந்த பஸ் கட்டண திருத்தங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது எனவும்   அவர் தெரிவித்தார்.

புதிய பஸ் கட்டண திருத்தம்.பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள். புதிய பஸ் கட்டண திருத்தம் காரணமாக பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையில் தினமும் முரண்பாடுகள் ஏற்படுவதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.புதிய கட்டணத்தை அறவிடும்போது பஸ் நடத்துனர்களிடம் சில்லறை நாணயங்கள் இல்லாததே இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, ஒவ்வொரு பயணிகள் பஸ்ஸுக்கும் மத்திய வங்கி நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சில்லறைப் பணத்தை வழங்கினால் இந்த நிலைமை குறையும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், தமது தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசித்து இந்த பஸ் கட்டண திருத்தங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது எனவும்   அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement