• Nov 24 2024

புதிய அரசு வீதிகளை மட்டுமல்ல, மக்களின் நிலங்களை விடுவிப்பதும் அவசியம் – ஈ.பி.டி.பி வலியுறுத்து

Chithra / Nov 1st 2024, 3:27 pm
image

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (01.11.2024) ஊடக சந்திப்பொன்றை முன்னிடுத்திருந்த அவர் யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி மக்களின் பாவனைக்காக இன்றையதினம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதனடிப்படையில் கடந்த காலங்களில் நாம் பல்வேறுபட்ட விடவிப்புகளை  தென்னிலங்கை அரசுகளுடன் எமக்கிருக்கும் நல்லுறவு மூலமாக செய்திருந்தோம்.

குறிப்பாக யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி -  அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி இன்றுமுதல் பொதுமக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயம் தான்.

ஆனால் ஒருபக்கம் வீதிகள் விடுவிக்கப்பட்டபோதும் மறுபுறம் மக்களின் காணி நிலங்களை கம்பி வேலிகள் கொண்டு படைத்தரப்பினரால் எல்லையிடுவதை அவதானிக்க முடிந்தது.

மக்களுக்கு வீதிகள் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று அவர்களது பூர்வீக காணி நிலங்களும் அந்த மக்களுக்கு மிகவும் அவசியமாகும்.

இதேநேரம் இன்றையதினம் குறிப்பிட்ட அளவான வீதியே மக்கள் பாவனைக்காக விடுக்கப்பட்டது. குறித்த வீதியை விடுவிப்பதற்கு கடந்த கால அரசுடன் எமது கட்சியின் செயலாளர் நாயகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அதற்கான சாதகமான பதிலும் கிடைக்கப்பெற்றிருந்தது. 

ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் அதிகார மாற்றம் ஏற்பட்டதால் அதை நிறைவுசெய்ய முடியது போனது.

இந்நிலையிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாட்டை பொறுப்பெடுத்துள்ள புதிய ஜனாதிபதி அனுரகுமார  திசநாககாவுக்கு கடந்த அரசில் எமது முயற்சியால் முன்வைக்கப்பட்டு இறுதி கட்ட நிலைகளில் இருந்த விடயங்களை நிறைவு செய்துகொடுப்பதற்கான ஏது நிலைகளை ஏற்படுத்தி தருமாறு 38 விடயங்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்தில் இந்த வீதியின் விடுவிப்பும் அதன் அவசிய தேவையும் சுட்டிக்காட்டப்பட்டு வலியுறுத்தப்பட்டடிருந்தது. இந்நிலையில் இன்று குறித்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மீள்குடியேற்றங்களானாலும் சரி பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளானாலும் சரி மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளானாலும் சரி கல்வி மருத்துவம உள்ளிட்ட அதியாவசிய விடயங்களானாலும் சரி எமது கட்சியின் முயற்சியால் தான் நிறைவு செய்யப்பட்டன.

இதை வேறெவரும் உரிமைகோர முடியாது.

ஆனால் தேர்தல் காலமாக தற்போது உள்ளதால் எதிர்பரசியல் செய்தவர்களும் அரசுக்கு நல்லாட்சி காலத்தில் முண்டுகொடுத்துக்கொண்டிருந்தவர்களும் தத்தமது போக்கிற்கு கதைக்க முற்படுகின்றனர். ஆனால் இதன் உண்மை நிலையை மக்கள் நன்கு அறிவர்.

மேலும் கடந்தகாலங்களில் நாம் ஏனைய தமிழ் தரப்பினருக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துவந்திருந்தோம்.

ஆனால் அவர்கள்  தமது தேர்தல் தோல்வி அச்சம் காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுக்காது திரைமறைவில்  அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து தமது சுயநலத் தேவைகளை பெற்று நிவர்த்தி செய்து வந்திருந்தனர்.

ஆனால் இம்முறை வெளிப்படையாகவே பலர் மக்கள் விரும்புவதாகவுமத் அதனால் அமைச்சு பொறுப்புக்களை எடுப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாகவும் அந்த கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

இதை நாம் கூறியிருந்தபோது ஏற்றிருந்தால் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்பட்டிருக்கும்.

ஆனாலும் காலம் கடந்தாவது அவர்கள் எமது வழிமுறையை தேர்ந்தெடுக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்களது இந்த நோக்கம் மக்கள் நலன்களுக்கானதாக சுயநலமற்றதாக இருப்பதும் அவசியமாகும்  

தென்னிலங்கைக்க ஒரு முகத்தையும் வடக்கில் இன்னொரு முகத்தையும் அதாவது மாற்றான் போக்கு நிலையை புதிய அரசு கொண்டிருப்பதாக மக்கள் பேச ஆரம்பித்துள்ளர்.  


ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்கா பதவியேற்ற பின்னர் தமிழ் அரசியல் தரப்பினரை தன்னுடன் பேசவதற்கு அழைப்புவிடுத்திருந்தார். 

குறிப்பாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தாவை அந்த அழைப்புடன் விசேடமாக கடற்றொழிலாளர் விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதனடிப்படையிலேயே எமது கட்சியின் தலைவர் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுடன் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.

நாம் அடிமட்டத்தில் இருப்பவர்களுடன் பேசுவது கிடையாது. ஜனாதிபதியுடன் தான் பேச்சுக்களை மேற்கொள்வது வழமை. அதுபோன்றுதான் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பும் பேச்சுக்களும் இருக்கின்றது. 

கட்சிகளின் அடிமட்டத்திலுள்ள சிலர் யாழ்ப்பாணத்தில் தமது விருப்புக்கு எதனையும் கூறலாம் அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகவே இருக்குமே தவிர ஜனாதிபதியின் கருத்தாக இருக்காது. 

அதுமட்டுமல்லாது வீதியால் செல்லும்போது குலைக்கின்ற நாய்களுக்கெல்லாம் எறிந்துகொண்டிருப்பவர்களும் நாமல்ல.

இதேநேரம் நாம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாக தெரிவித்திருந்தோம் எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை. 

அதாவது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது நிலைப்பாட்டை தேர்தல் முடிந்த பின்னரே மத்தியில் ஆட்சியில் இணைந்துகொள்வது தொடர்பில் சிந்திப்போம் என்று. இதேவேளை நாம் ஒருபோது அமைச்சுக்களை பெறுவதற்காக எவருடனும் பங்காளர்களாக சென்றதில்லை.

மக்களின் நலன்களை பெற்றுக்கொடுப்பதற்கான தரப்பினராக இருந்துகொண்டே அரசுகளில் பங்கெடுத்திருந்தோம். அதனூடாக பல வெற்றிகளையும் கண்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசு வீதிகளை மட்டுமல்ல, மக்களின் நிலங்களை விடுவிப்பதும் அவசியம் – ஈ.பி.டி.பி வலியுறுத்து உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (01.11.2024) ஊடக சந்திப்பொன்றை முன்னிடுத்திருந்த அவர் யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி மக்களின் பாவனைக்காக இன்றையதினம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதனடிப்படையில் கடந்த காலங்களில் நாம் பல்வேறுபட்ட விடவிப்புகளை  தென்னிலங்கை அரசுகளுடன் எமக்கிருக்கும் நல்லுறவு மூலமாக செய்திருந்தோம்.குறிப்பாக யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி -  அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி இன்றுமுதல் பொதுமக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயம் தான்.ஆனால் ஒருபக்கம் வீதிகள் விடுவிக்கப்பட்டபோதும் மறுபுறம் மக்களின் காணி நிலங்களை கம்பி வேலிகள் கொண்டு படைத்தரப்பினரால் எல்லையிடுவதை அவதானிக்க முடிந்தது.மக்களுக்கு வீதிகள் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று அவர்களது பூர்வீக காணி நிலங்களும் அந்த மக்களுக்கு மிகவும் அவசியமாகும்.இதேநேரம் இன்றையதினம் குறிப்பிட்ட அளவான வீதியே மக்கள் பாவனைக்காக விடுக்கப்பட்டது. குறித்த வீதியை விடுவிப்பதற்கு கடந்த கால அரசுடன் எமது கட்சியின் செயலாளர் நாயகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அதற்கான சாதகமான பதிலும் கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் அதிகார மாற்றம் ஏற்பட்டதால் அதை நிறைவுசெய்ய முடியது போனது.இந்நிலையிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாட்டை பொறுப்பெடுத்துள்ள புதிய ஜனாதிபதி அனுரகுமார  திசநாககாவுக்கு கடந்த அரசில் எமது முயற்சியால் முன்வைக்கப்பட்டு இறுதி கட்ட நிலைகளில் இருந்த விடயங்களை நிறைவு செய்துகொடுப்பதற்கான ஏது நிலைகளை ஏற்படுத்தி தருமாறு 38 விடயங்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.குறித்த கடிதத்தில் இந்த வீதியின் விடுவிப்பும் அதன் அவசிய தேவையும் சுட்டிக்காட்டப்பட்டு வலியுறுத்தப்பட்டடிருந்தது. இந்நிலையில் இன்று குறித்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.இதேநேரம் வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மீள்குடியேற்றங்களானாலும் சரி பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளானாலும் சரி மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளானாலும் சரி கல்வி மருத்துவம உள்ளிட்ட அதியாவசிய விடயங்களானாலும் சரி எமது கட்சியின் முயற்சியால் தான் நிறைவு செய்யப்பட்டன.இதை வேறெவரும் உரிமைகோர முடியாது.ஆனால் தேர்தல் காலமாக தற்போது உள்ளதால் எதிர்பரசியல் செய்தவர்களும் அரசுக்கு நல்லாட்சி காலத்தில் முண்டுகொடுத்துக்கொண்டிருந்தவர்களும் தத்தமது போக்கிற்கு கதைக்க முற்படுகின்றனர். ஆனால் இதன் உண்மை நிலையை மக்கள் நன்கு அறிவர்.மேலும் கடந்தகாலங்களில் நாம் ஏனைய தமிழ் தரப்பினருக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துவந்திருந்தோம்.ஆனால் அவர்கள்  தமது தேர்தல் தோல்வி அச்சம் காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுக்காது திரைமறைவில்  அரசுகளுக்கு ஆதரவு கொடுத்து தமது சுயநலத் தேவைகளை பெற்று நிவர்த்தி செய்து வந்திருந்தனர்.ஆனால் இம்முறை வெளிப்படையாகவே பலர் மக்கள் விரும்புவதாகவுமத் அதனால் அமைச்சு பொறுப்புக்களை எடுப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாகவும் அந்த கட்சிகள் கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.இதை நாம் கூறியிருந்தபோது ஏற்றிருந்தால் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்பட்டிருக்கும்.ஆனாலும் காலம் கடந்தாவது அவர்கள் எமது வழிமுறையை தேர்ந்தெடுக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்களது இந்த நோக்கம் மக்கள் நலன்களுக்கானதாக சுயநலமற்றதாக இருப்பதும் அவசியமாகும்  தென்னிலங்கைக்க ஒரு முகத்தையும் வடக்கில் இன்னொரு முகத்தையும் அதாவது மாற்றான் போக்கு நிலையை புதிய அரசு கொண்டிருப்பதாக மக்கள் பேச ஆரம்பித்துள்ளர்.  ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்கா பதவியேற்ற பின்னர் தமிழ் அரசியல் தரப்பினரை தன்னுடன் பேசவதற்கு அழைப்புவிடுத்திருந்தார். குறிப்பாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தாவை அந்த அழைப்புடன் விசேடமாக கடற்றொழிலாளர் விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.அதனடிப்படையிலேயே எமது கட்சியின் தலைவர் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவுடன் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.நாம் அடிமட்டத்தில் இருப்பவர்களுடன் பேசுவது கிடையாது. ஜனாதிபதியுடன் தான் பேச்சுக்களை மேற்கொள்வது வழமை. அதுபோன்றுதான் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பும் பேச்சுக்களும் இருக்கின்றது. கட்சிகளின் அடிமட்டத்திலுள்ள சிலர் யாழ்ப்பாணத்தில் தமது விருப்புக்கு எதனையும் கூறலாம் அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகவே இருக்குமே தவிர ஜனாதிபதியின் கருத்தாக இருக்காது. அதுமட்டுமல்லாது வீதியால் செல்லும்போது குலைக்கின்ற நாய்களுக்கெல்லாம் எறிந்துகொண்டிருப்பவர்களும் நாமல்ல.இதேநேரம் நாம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாக தெரிவித்திருந்தோம் எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை. அதாவது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது நிலைப்பாட்டை தேர்தல் முடிந்த பின்னரே மத்தியில் ஆட்சியில் இணைந்துகொள்வது தொடர்பில் சிந்திப்போம் என்று. இதேவேளை நாம் ஒருபோது அமைச்சுக்களை பெறுவதற்காக எவருடனும் பங்காளர்களாக சென்றதில்லை.மக்களின் நலன்களை பெற்றுக்கொடுப்பதற்கான தரப்பினராக இருந்துகொண்டே அரசுகளில் பங்கெடுத்திருந்தோம். அதனூடாக பல வெற்றிகளையும் கண்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement