அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக தலா 4 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் இன்று (20) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டன.இந்நிகழ்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிரனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.
உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரொசானா,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளர் முகமது சப்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக தலா 4 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் இன்று (20) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டன.இந்நிகழ்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிரனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரொசானா,தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளர் முகமது சப்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.