• Sep 19 2024

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகள்! - ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / Dec 16th 2022, 8:05 am
image

Advertisement

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆசிரியர்கள் நியமனம் பெற்று ஐந்து வருடங்களுக்கு இடமாற்றங்களை வழங்காமை தொடர்பில் கல்வியமைச்சும் மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை பகுதியில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தேயிலையையும் பயிரிட்டனர்.

எனவே, பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு முன்னர் இது நீரேந்துப் பிரதேசங்களைப் பாதிக்கிறதா? என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக ஆராய்தல் வேண்டும்.

பெருந்தோட்டத் துறையில் சில அதிகாரிகள் சட்டக் கோவைகளை கேடயமாகக்கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகள் - ஜனாதிபதி அறிவிப்பு பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநேரம், ஆசிரியர்கள் நியமனம் பெற்று ஐந்து வருடங்களுக்கு இடமாற்றங்களை வழங்காமை தொடர்பில் கல்வியமைச்சும் மாகாண சபையும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பதுளை பகுதியில் உள்ள பைனஸ் மரங்களை அகற்றுவதற்கு முன்னர் அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பைனஸ் பயிர்ச்செய்கை இருக்கும்போதே தேயிலையையும் பயிரிட்டனர்.எனவே, பைனஸ் பயிர்ச்செய்கையை அகற்றுவதற்கு முன்னர் இது நீரேந்துப் பிரதேசங்களைப் பாதிக்கிறதா என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக ஆராய்தல் வேண்டும்.பெருந்தோட்டத் துறையில் சில அதிகாரிகள் சட்டக் கோவைகளை கேடயமாகக்கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement