• Oct 14 2026

இலங்கையில் குடும்பக் கடன்களில் புதிய உச்சம்? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!

Chithra / Oct 13th 2026, 1:06 pm
image


இலங்கையில் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 25.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.


கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கான கடன் அதிகரிப்பு 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இவ்வாண்டு அது 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இதன்மூலம் குடும்பங்களுக்கான கடன் வழங்கலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


நாட்டில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 49 சதவீதத்துக்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன், வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகள் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்படும் கடன்கள் என்பன குடும்பங்களுக்கான கடன் வழங்கலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.


இந்நிலையில், குடும்பங்களுக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளமை நாட்டின் நிதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.


இலங்கையில் குடும்பக் கடன்களில் புதிய உச்சம் வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இலங்கையில் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 25.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கான கடன் அதிகரிப்பு 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இவ்வாண்டு அது 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதன்மூலம் குடும்பங்களுக்கான கடன் வழங்கலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.நாட்டில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 49 சதவீதத்துக்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகள் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்படும் கடன்கள் என்பன குடும்பங்களுக்கான கடன் வழங்கலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.இந்நிலையில், குடும்பங்களுக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளமை நாட்டின் நிதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement