• Oct 30 2026

நவம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

TIN
Chithra / Oct 30th 2026, 10:19 am
image


இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் அவசியமாகும்.


மேலும், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் குறித்த சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.


நாட்டின் வரி செலுத்துவோர் அடித்தளத்தை விரிவுபடுத்துதல், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 1 முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, புதிய வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் அவசியமாகும்.மேலும், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் குறித்த சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.நாட்டின் வரி செலுத்துவோர் அடித்தளத்தை விரிவுபடுத்துதல், நிதிப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement