• Aug 27 2025

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறை

Chithra / Aug 27th 2025, 8:24 am
image


சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். 

சாரதி உரிமம் பெற வருவோருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையின் மருத்துவ நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதனையடுத்தே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தற்போது, நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் சாரதி உரிமத்திற்கு விண்ணப்பிப்போருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகிறது. 

இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது என்பது தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சாரதி உரிமம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மக்கள் வேரஹெரவிற்கு செல்ல வேண்டும். 

இது சிரமத்தை ஏற்படுத்துகிறது.  கைரேகைகளை வழங்குவதற்கே அவர்கள் நேரில் வரவேண்டியுள்ளது. 

 எனினும் அடுத்த ஒரு மாதத்திற்குள், இந்த முறையையும் மாற்றப்பட்டு, வேரஹெரவிற்குச் செல்லாமல் சாரதி உரிமத்தைப் புதுப்பிப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று  பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறை சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். சாரதி உரிமம் பெற வருவோருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையின் மருத்துவ நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்தே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் சாரதி உரிமத்திற்கு விண்ணப்பிப்போருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது என்பது தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சாரதி உரிமம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மக்கள் வேரஹெரவிற்கு செல்ல வேண்டும். இது சிரமத்தை ஏற்படுத்துகிறது.  கைரேகைகளை வழங்குவதற்கே அவர்கள் நேரில் வரவேண்டியுள்ளது.  எனினும் அடுத்த ஒரு மாதத்திற்குள், இந்த முறையையும் மாற்றப்பட்டு, வேரஹெரவிற்குச் செல்லாமல் சாரதி உரிமத்தைப் புதுப்பிப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று  பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement