• Sep 20 2024

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு- பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு ! samugammedia

Tamil nila / Jun 11th 2023, 10:07 pm
image

Advertisement

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதத்தில் இருந்து முழுமையாக செயல்பட உள்ளது.

இந்த சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8 ம் திகதி திறந்து வைத்துள்ளார்.

புதிய முனையம் சோதனை முறையில் ஏப்ரல் 25 ம் திகதி முதல் செயல்படத் தொடங்கியது.

அன்றைய தினம் சோதனை நடவடிக்கையாக பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை - டாக்கா இடையே ‘யுஎஸ் பங்ளா’ என்ற பயணிகள் விமானம் செயல்படுத்தப்பட்டது.

சிறிய வகை விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் இருந்து நடுத்தர விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளன.

ஜூன் மாதம் முழுவதும் சோதனை முறையில் விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து புதிய விமான முனையம் முழுமையாக செயல்படத் தொடங்கவுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

புதிய முனையம் திறப்பால் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு- பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு samugammedia சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதத்தில் இருந்து முழுமையாக செயல்பட உள்ளது.இந்த சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8 ம் திகதி திறந்து வைத்துள்ளார்.புதிய முனையம் சோதனை முறையில் ஏப்ரல் 25 ம் திகதி முதல் செயல்படத் தொடங்கியது.அன்றைய தினம் சோதனை நடவடிக்கையாக பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை - டாக்கா இடையே ‘யுஎஸ் பங்ளா’ என்ற பயணிகள் விமானம் செயல்படுத்தப்பட்டது.சிறிய வகை விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் இருந்து நடுத்தர விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளன.ஜூன் மாதம் முழுவதும் சோதனை முறையில் விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து புதிய விமான முனையம் முழுமையாக செயல்படத் தொடங்கவுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.புதிய முனையம் திறப்பால் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement