உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் போலாந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இவர்களின் விஜயம் எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திது இருதரப்பு கலந்துரையாடல்களில் நியூசிலாந்து, போலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் ஈடுபட உள்ளனர்.
பொருளாதார ரீதியில் இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஆர்வத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
இலங்கை வரும் நியூசிலாந்து, போலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் போலாந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இவர்களின் விஜயம் எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திது இருதரப்பு கலந்துரையாடல்களில் நியூசிலாந்து, போலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் ஈடுபட உள்ளனர்.பொருளாதார ரீதியில் இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய முதலீட்டு திட்டங்கள் குறித்து அரசாங்கம் ஆர்வத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது.