• Aug 19 2026

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை - ஊதியத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை

Chithra / Aug 19th 2026, 12:18 pm
image


இலங்கை பொலிஸாருக்காக புதிய சீருடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே சீருடையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும், புதிய சீருடை ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


பொலிஸ் அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் அரசாங்கத்தின் திட்டங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், அதனை மேலும் மக்கள் நட்புறவுடைய சேவையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


மேலும், பொலிஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பொலிஸ் அதிகாரிகளின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை - ஊதியத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை இலங்கை பொலிஸாருக்காக புதிய சீருடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே சீருடையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும், புதிய சீருடை ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் அரசாங்கத்தின் திட்டங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், அதனை மேலும் மக்கள் நட்புறவுடைய சேவையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.மேலும், பொலிஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பொலிஸ் அதிகாரிகளின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement