• Jan 15 2025

அகதிகளின் படகு மூழ்கி விபத்து- 9 பேர் சடலங்களாக மீட்பு; தொடரும் அவலம்!

Tamil nila / Dec 12th 2024, 9:19 pm
image

துனிசியாவின் கடலோர காவல்படையினர் ஒன்பது பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும்   துனிசிய கடலில் படகு  மூழ்கியதில் இன்னும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. 

மத்தியதரைக் கடலில் சமீபத்திய அகதிகள் படகு பேரழிவு பற்றி நீதித்துறை அதிகாரி ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

மோசமான வானிலை காரணமாக படகு பழுதடைந்து தண்ணீர் உள்நுழைந்தபோது ,படகு மூழ்கும் நிலையில்  கடலோர காவல்படையினர் கடந்த வியாழக்கிழமை அதிலிருந்து 27 பேரை மீட்டனர். 

அதிலிருந்து தப்பியவர்களின் சாட்சியங்களின்படி, படகில் சுமார்  42 பேர் பயணித்ததாக தெரிய வருகிறது. 

மேலும் குறித்த படகிலிருந்து காணாமல் போன ஆறு பேரை தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

அகதிகளின் படகு மூழ்கி விபத்து- 9 பேர் சடலங்களாக மீட்பு; தொடரும் அவலம் துனிசியாவின் கடலோர காவல்படையினர் ஒன்பது பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும்   துனிசிய கடலில் படகு  மூழ்கியதில் இன்னும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. மத்தியதரைக் கடலில் சமீபத்திய அகதிகள் படகு பேரழிவு பற்றி நீதித்துறை அதிகாரி ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மோசமான வானிலை காரணமாக படகு பழுதடைந்து தண்ணீர் உள்நுழைந்தபோது ,படகு மூழ்கும் நிலையில்  கடலோர காவல்படையினர் கடந்த வியாழக்கிழமை அதிலிருந்து 27 பேரை மீட்டனர். அதிலிருந்து தப்பியவர்களின் சாட்சியங்களின்படி, படகில் சுமார்  42 பேர் பயணித்ததாக தெரிய வருகிறது. மேலும் குறித்த படகிலிருந்து காணாமல் போன ஆறு பேரை தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement