• Oct 19 2024

தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் யாழில் மோசமான நிலை ஏற்படும்- நிஷாந்தன் எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Apr 14th 2023, 7:19 pm
image

Advertisement

வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை  தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும்  என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார்

யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில்  இலங்கையில் உள்ள தீவுகளை  ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக தெரிவித்து ஓர் அதிகார சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

வட பகுதியில் குறிப்பாக யாழ். குடாவில் 15க்கு மேற்பட்ட வளமான தீவுகள் காணப்படுகின்ற நிலையில் அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் குறித்த அதிகார சபையை உருவாக்க முயல்கிறார்கள்.

மகாவலி அதிகார சபையை உருவாக்கி எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை வடபகுதியில் ஏற்படுத்தினார்களோ அதே போன்று தீவக அதிகார சபையை உருவாக்கி தமிழர்களின் தீவுகளை கையகப்படுத்தும் தந்திரத்தை  அரசாங்கம் செய்ய உள்ளது.

தீவக அதிகார சபை உருவாக்கப்பட்டால் பிரதேச சபை பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் என்பன தலையிட முடியாத சூழ்நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார். 


தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் யாழில் மோசமான நிலை ஏற்படும்- நிஷாந்தன் எச்சரிக்கை samugammedia வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை  தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும்  என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார்யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவித்த அவர், வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில்  இலங்கையில் உள்ள தீவுகளை  ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக தெரிவித்து ஓர் அதிகார சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.வட பகுதியில் குறிப்பாக யாழ். குடாவில் 15க்கு மேற்பட்ட வளமான தீவுகள் காணப்படுகின்ற நிலையில் அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் குறித்த அதிகார சபையை உருவாக்க முயல்கிறார்கள்.மகாவலி அதிகார சபையை உருவாக்கி எவ்வாறு சிங்கள குடியேற்றங்களை வடபகுதியில் ஏற்படுத்தினார்களோ அதே போன்று தீவக அதிகார சபையை உருவாக்கி தமிழர்களின் தீவுகளை கையகப்படுத்தும் தந்திரத்தை  அரசாங்கம் செய்ய உள்ளது.தீவக அதிகார சபை உருவாக்கப்பட்டால் பிரதேச சபை பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் என்பன தலையிட முடியாத சூழ்நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement