• Apr 20 2026

ஆஸ்திரேலியா அருகே கைலாசா நாட்டில் நித்யானந்தா! ஐ.நா. சபையும் அங்கீகாரம்

Chithra / Jun 20th 2025, 8:25 am
image


அவுஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார் எனவும் கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்றும்  உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர்  நேற்று தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்குள்ளது? அங்கு எப்படிச் செல்வது, கைலாசா செல்ல கடவுச்சீட்டு, விசா உண்டா? என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நித்யானந்தாவின் சீடர் அர்ச்சனா பதிலளிக்கையில், 

நித்யானந்தா அவுஸ்திரேலியா அருகேயுள்ள யு.எஸ்.கே. (யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா) என்ற தனி நாட்டில் உள்ளார். இந்த நாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு.

இந்த வழக்கில் புதிய வழக்கறிஞரை நியமிக்க உள்ளோம். அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.   

வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அருகே கைலாசா நாட்டில் நித்யானந்தா ஐ.நா. சபையும் அங்கீகாரம் அவுஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார் எனவும் கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்றும்  உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர்  நேற்று தெரிவித்துள்ளார்.மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மனுதாரர் நித்யானந்தா எங்கு உள்ளார் கைலாசா நாடு எங்குள்ளது அங்கு எப்படிச் செல்வது, கைலாசா செல்ல கடவுச்சீட்டு, விசா உண்டா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நித்யானந்தாவின் சீடர் அர்ச்சனா பதிலளிக்கையில், நித்யானந்தா அவுஸ்திரேலியா அருகேயுள்ள யு.எஸ்.கே. (யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா) என்ற தனி நாட்டில் உள்ளார். இந்த நாடு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு.இந்த வழக்கில் புதிய வழக்கறிஞரை நியமிக்க உள்ளோம். அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.   வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement