• Nov 07 2025

ஜெனிவாவின் பிரேரணைகளை எந்தெவொரு அரசாங்கமும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை - விஜித ஹேரத்!

shanuja / Oct 9th 2025, 2:54 pm
image

ஜெனிவாவில் இடம்பெறுகின்ற தேசிய பிரச்சினைகளுடனான பிரேரணைகளை எந்தெவொரு அரசாங்கமும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கை தொடர்பான பிரேரணைகள் 16 வருடத்திற்கு மேலாக மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்படாமைக்கான காரணம் என்ன? 

ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் முன்மொழிவுகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.


யுத்த களத்தில் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகள் எழும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 


ஆகவே வெளிப்படைத் தன்மையுடன் தீர்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கின்றோம். தேசிய அளவில் அனைவரையும் இணைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டு வருவோம். - என்றார்.

ஜெனிவாவின் பிரேரணைகளை எந்தெவொரு அரசாங்கமும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை - விஜித ஹேரத் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற தேசிய பிரச்சினைகளுடனான பிரேரணைகளை எந்தெவொரு அரசாங்கமும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொடர்பான பிரேரணைகள் 16 வருடத்திற்கு மேலாக மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்படாமைக்கான காரணம் என்ன ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் முன்மொழிவுகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.யுத்த களத்தில் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகள் எழும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆகவே வெளிப்படைத் தன்மையுடன் தீர்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கின்றோம். தேசிய அளவில் அனைவரையும் இணைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டு வருவோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement