• Nov 22 2024

அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை! அமைச்சர் மஹிந்த தெரிவிப்பு

Chithra / Jan 21st 2024, 3:36 pm
image

 

நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இடம் அழிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபா செலவில் புல்னேவ அரிசி பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டதன் பின்னர், அதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து அரிசி பதப்படுத்தும் இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை அமைச்சர் மஹிந்த தெரிவிப்பு  நாட்டில் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கமைய அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இடம் அழிக்கப்பட்டுள்ளது.பல கோடி ரூபா செலவில் புல்னேவ அரிசி பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டதன் பின்னர், அதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எனினும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து அரிசி பதப்படுத்தும் இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement