• Nov 25 2024

ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்கவே முடியாது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ..!!

Tamil nila / May 11th 2024, 6:11 am
image

"அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகின்றது. ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது."

- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பத்தரமுல்லைப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

"ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எமது வேட்பாளர் யார் என்பதைக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவார். சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும்.

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க என்பதைத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் அறிவித்து விட்டார்கள்.

முன்னறிவிப்புக்களை விடுப்பதால் மாத்திரம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்க வாக்களிக்கமாட்டார்கள்.

வன்முறையான அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுப்பட்டு, ஜனநாயக அரசியலுக்குப் பிரவேசித்துள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால், இவர்களின் உண்மை முகம் அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகின்றது. அழிப்பதும், தீ வைப்பதும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கையாகும்.

2022ஆம் ஆண்டு சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது என எதிர்த்தரப்பினர் கருதுகின்றார்கள். அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது." - என்றார்.

ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்கவே முடியாது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. "அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகின்றது. ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது."- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.பத்தரமுல்லைப் பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியதாவது:-"ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எமது வேட்பாளர் யார் என்பதைக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவார். சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும்.மக்கள் விடுதலை முன்னணியினரின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க என்பதைத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் அறிவித்து விட்டார்கள்.முன்னறிவிப்புக்களை விடுப்பதால் மாத்திரம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்க வாக்களிக்கமாட்டார்கள்.வன்முறையான அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுப்பட்டு, ஜனநாயக அரசியலுக்குப் பிரவேசித்துள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுகின்றார்கள்.ஆனால், இவர்களின் உண்மை முகம் அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகின்றது. அழிப்பதும், தீ வைப்பதும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கையாகும்.2022ஆம் ஆண்டு சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது என எதிர்த்தரப்பினர் கருதுகின்றார்கள். அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement