• Dec 27 2024

அரிசியை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுப்பு!

Chithra / Dec 23rd 2024, 3:29 pm
image

 

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி வெளியிடும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய அரிசித்  தட்டுப்பாட்டிற்கு தீர்வாக கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு  தனியார் இறக்குமதியாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது

குறித்த காலப்பகுதியில் தனியார் இறக்குமதியாளர்களினால் 67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதுடன், அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் வரி இலங்கை சுங்கத்தினால் அறவிடப்பட்டுள்ளது


இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கடந்த 20 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு,  முன்தாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

எனினும், இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படாமையினால்  அரசாங்கத்தினால் அரிசி  இறக்குமதி செய்தாலும் அதனை சந்தைக்கு வெளியிட முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி கையிருப்பு எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அத்துடன் அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி இன்று நடைபெறவுள்ள  அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

இதேவேளை அரிசி இறக்குமதியின் மூலம் நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டாலும், அரிசி பற்றாக்குறைக்கு முழுமையாக தீர்வு கிட்டவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அரிசியை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுப்பு  அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி வெளியிடும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய அரிசித்  தட்டுப்பாட்டிற்கு தீர்வாக கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு  தனியார் இறக்குமதியாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுகுறித்த காலப்பகுதியில் தனியார் இறக்குமதியாளர்களினால் 67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதுடன், அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் வரி இலங்கை சுங்கத்தினால் அறவிடப்பட்டுள்ளதுஇதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது.அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கடந்த 20 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு,  முன்தாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.எனினும் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.எனினும், இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படாமையினால்  அரசாங்கத்தினால் அரிசி  இறக்குமதி செய்தாலும் அதனை சந்தைக்கு வெளியிட முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி கையிருப்பு எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.அத்துடன் அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி இன்று நடைபெறவுள்ள  அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதுஇதேவேளை அரிசி இறக்குமதியின் மூலம் நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டாலும், அரிசி பற்றாக்குறைக்கு முழுமையாக தீர்வு கிட்டவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement