'தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை எனவும் இதுவரை மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஐஸ்டினா முரளிதரனின் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
1978 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அரசமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாண சபை அலகு போதியதல்ல, எனவே, இந்த விடயத்தில் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும்.
அது மாத்திரமல்ல, புதிய அரசியல் யாப்பை முன்வைக்கும்போது 13 ஆம் திருத்தச் சட்டம் அல்ல முதலாவது திருத்தம் தொடக்கம் 20 வரையிலான திருத்தங்கள் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளது.
இந்த விடயம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே, தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை.
அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை - அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசமைப்பு தேவை.
அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம்.
எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மாகாண சபை முறைமையை நீக்கம் தொடர்பில் மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை;அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டு. 'தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை எனவும் இதுவரை மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஐஸ்டினா முரளிதரனின் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,1978 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அரசமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாண சபை அலகு போதியதல்ல, எனவே, இந்த விடயத்தில் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும்.அது மாத்திரமல்ல, புதிய அரசியல் யாப்பை முன்வைக்கும்போது 13 ஆம் திருத்தச் சட்டம் அல்ல முதலாவது திருத்தம் தொடக்கம் 20 வரையிலான திருத்தங்கள் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளது.இந்த விடயம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே, தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை - அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம். எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.