• Jun 22 2024

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - IMF அறிவிப்பு

IMF
Chithra / Jun 14th 2024, 10:30 am
image

Advertisement

 

 இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்  மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் எனவும், 

உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - IMF அறிவிப்பு   இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்  மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் எனவும், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement