• Jun 18 2024

கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்...!

Sharmi / Jun 14th 2024, 10:41 am
image

Advertisement

கம்பஹா நகரை சுற்றியுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கம்பஹா நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான  கால்வாயில் சிக்கியுள்ள கழிவுகள், ஜப்பானிய ஜபரா மற்றும் பாசிகளை அகற்றும் பணியை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தற்போது ஆரம்பித்துள்ளது.

கம்பஹா குந்திவில கால்வாய்க்கு அருகில் பல இடங்களில் இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

அண்மையில் பெய்த கடும் மழையினால் கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தம் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, அமைச்சின் செயலாளர் எஸ். சத்யானந்த தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகரைச் சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளில் தேங்கிய கழிவுகள் மற்றும் அண்மையிலுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் தற்காலிக நிர்மாணங்கள் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.

இதற்கு பதிலாக காணி அபிவிருத்திக் கழகம் மூன்று அம்ச வேலைத்திட்டத்தை முன்வைத்தது. இதில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் அடங்கும். அந்த முன்மொழிவுகளின் குறுகிய கால தீர்வு நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது.

அதன்படி கம்பஹா நகரை கடந்து செல்லும் பிரதான கால்வாயில் தேங்கியிருந்த பல்வேறு கழிவுகள் மற்றும் மரத்தடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக கம்பஹாவைச் சுற்றியுள்ள கால்வாய் சுத்தப்படுத்தும் திட்டம் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கால்வாய் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடருமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கால்வாய்களை துப்பரவு செய்யும் நிகழ்வை அவதானிப்பதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் திஸ்ஸ குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.





கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம். கம்பஹா நகரை சுற்றியுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கம்பஹா நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான  கால்வாயில் சிக்கியுள்ள கழிவுகள், ஜப்பானிய ஜபரா மற்றும் பாசிகளை அகற்றும் பணியை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தற்போது ஆரம்பித்துள்ளது.கம்பஹா குந்திவில கால்வாய்க்கு அருகில் பல இடங்களில் இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.அண்மையில் பெய்த கடும் மழையினால் கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தம் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.இதன்படி, அமைச்சின் செயலாளர் எஸ். சத்யானந்த தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகரைச் சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளில் தேங்கிய கழிவுகள் மற்றும் அண்மையிலுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் தற்காலிக நிர்மாணங்கள் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. இதற்கு பதிலாக காணி அபிவிருத்திக் கழகம் மூன்று அம்ச வேலைத்திட்டத்தை முன்வைத்தது. இதில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் அடங்கும். அந்த முன்மொழிவுகளின் குறுகிய கால தீர்வு நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது.அதன்படி கம்பஹா நகரை கடந்து செல்லும் பிரதான கால்வாயில் தேங்கியிருந்த பல்வேறு கழிவுகள் மற்றும் மரத்தடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.முன்னதாக கம்பஹாவைச் சுற்றியுள்ள கால்வாய் சுத்தப்படுத்தும் திட்டம் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. கால்வாய் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடருமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.கால்வாய்களை துப்பரவு செய்யும் நிகழ்வை அவதானிப்பதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் திஸ்ஸ குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement