• Nov 26 2024

திருமலையில் மூன்று கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு- உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு..!

Sharmi / Oct 12th 2024, 11:38 am
image

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும்  மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது. 

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. 

4ம் திகதி தொடக்கம் 11 ம் திகதி இன்று(11) வரை மதியம் 12.00 மணிவரை குறித்த வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.

திருமலையில் மூன்று கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு- உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும்  மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அதில் 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது. சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. 4ம் திகதி தொடக்கம் 11 ம் திகதி இன்று(11) வரை மதியம் 12.00 மணிவரை குறித்த வேட்பு மனு தாக்கல் இடம் பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement