• May 09 2026

உள்ளூர் இழுவை மடி படகால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு - வடக்கு மீனவன் வர்ணகுலசிங்கம்!

shanu / May 9th 2026, 10:34 pm
image

உள்ளூர் இழுவை மடி மீனபிடியால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவரும் வடக்கு மீனவ பிரதிநிதியுமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். 


அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,  


உள்ளூர் இழுவை மடி படகுகளின் மீன்பிடி தொழில் அதிகரித்துள்ளத்தால் சிறு மீனவர்களின் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.  சுமார் 40 வரை பயன்பாட்டிலிருந்த உள்ளூர் இழுவை மடி படகு தற்போது யாழ்ப்பாணத்தில் 600 க்கு அதிகமாக   உள்ளது. 


இதனால் மீன் உற்பத்தி இடங்கள் அழிக்கப்படுவதால் மீன் பிடி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்ளோர் சிறு மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


இதனை தடுப்பதற்கு மீன்பிடி அமைச்சோ அல்லது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.  இந்திய  இழுவை மடி படகுகளாலும் அதிகளவான பாதிப்புக்கள் தொடர்ந்தும்  இடம்பெற்று வருகின்றன. 


மீனவர்கள் பிரச்சினைகளை எவரும் கண்டு கொள்வதில்லை.  டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. 

 

தடை செய்யப்பட்ட அனைத்து தொழில்முறைகளையும் தடை செய்ய வேண்டும்.  தொடர்ந்தும் ஆட்சியில் வரும் கடற்றொழில் அரசாங்கங்களின் கடற்றொழில் அமைச்சர்களும் தமது அரசியல் நலனுக்காக தடை செய்யப்பட்ட மீன்பிடியை ஊக்குவிக்கின்றனர்.  


NPP யின் மே தின நிகழ்விற்கு செல்லாத மீனவர்களுக்கு சில அரச ஆதரவு சங்கங்கள்  3000 தண்டம் அறவிட்டது. கடற் றொழில் அமைச்சருக்கு கடற் றொழில் தொடர்பில் எதுவும் தெரியாது. மேலும் கடற்படை, காவல்துறை, சிறப்பு அதிரடி படை ஆகியோராவது மீனவர் பிரச்சனையில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

உள்ளூர் இழுவை மடி படகால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்பு - வடக்கு மீனவன் வர்ணகுலசிங்கம் உள்ளூர் இழுவை மடி மீனபிடியால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவரும் வடக்கு மீனவ பிரதிநிதியுமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,  உள்ளூர் இழுவை மடி படகுகளின் மீன்பிடி தொழில் அதிகரித்துள்ளத்தால் சிறு மீனவர்களின் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.  சுமார் 40 வரை பயன்பாட்டிலிருந்த உள்ளூர் இழுவை மடி படகு தற்போது யாழ்ப்பாணத்தில் 600 க்கு அதிகமாக   உள்ளது. இதனால் மீன் உற்பத்தி இடங்கள் அழிக்கப்படுவதால் மீன் பிடி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்ளோர் சிறு மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தடுப்பதற்கு மீன்பிடி அமைச்சோ அல்லது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.  இந்திய  இழுவை மடி படகுகளாலும் அதிகளவான பாதிப்புக்கள் தொடர்ந்தும்  இடம்பெற்று வருகின்றன. மீனவர்கள் பிரச்சினைகளை எவரும் கண்டு கொள்வதில்லை.  டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை.  தடை செய்யப்பட்ட அனைத்து தொழில்முறைகளையும் தடை செய்ய வேண்டும்.  தொடர்ந்தும் ஆட்சியில் வரும் கடற்றொழில் அரசாங்கங்களின் கடற்றொழில் அமைச்சர்களும் தமது அரசியல் நலனுக்காக தடை செய்யப்பட்ட மீன்பிடியை ஊக்குவிக்கின்றனர்.  NPP யின் மே தின நிகழ்விற்கு செல்லாத மீனவர்களுக்கு சில அரச ஆதரவு சங்கங்கள்  3000 தண்டம் அறவிட்டது. கடற் றொழில் அமைச்சருக்கு கடற் றொழில் தொடர்பில் எதுவும் தெரியாது. மேலும் கடற்படை, காவல்துறை, சிறப்பு அதிரடி படை ஆகியோராவது மீனவர் பிரச்சனையில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

Advertisement

Advertisement

Advertisement