• Apr 18 2026

வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் !

Ziya / Apr 17th 2026, 4:49 pm
image

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகும் விளையாட்டுத் திணைக்களமும், இணைந்து நடாத்தும் வட மாகாண சித்திரை புத்தாண்டு விழா உடுப்பிட்டி, இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது 


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு மாணவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.


தொடர்ந்து தமிழர் பொங்கல் இடம்பெற்றது. தமிழ் சிங்கள பண்பாட்டு குடில்கள் திறந்து வைக்கப்பட்டன.


இதில் கூட்டுறவு பிரதி அமைச்சரும், வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான்  உப்பாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட அரசியல் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள், வட மாகாண அதிகாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், மக்கள் என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர


பிற்பகல் வரை கலைநிகழ்வுகளாக  பாரம்பரிய விளையாட்டுக்களான கிறீஸ்கம்பம் ஏறுதல், விநோத உடை நிகழ்வுகள், தலையணைச்சண்டை, கிட்டி இழுத்தல், முட்டி உடைத்தல், கிளித்தட்டு (ஆண், பெண்), கயிறு இழுத்தல் (ஆண், பெண்), யானைக்கு கண்வைத்தல், கிடுகு பின்னல், சாக்கோட்டம், தேசிக்காய்க்கரண்டி, போர்த்தேங்காய் அடித்தல் போன்றனவும் இடம்பெற உள்ளதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் விற்பனைக் கூடங்களுடன் மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை சிறப்பிக்கவுள்ளன. 



வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகும் விளையாட்டுத் திணைக்களமும், இணைந்து நடாத்தும் வட மாகாண சித்திரை புத்தாண்டு விழா உடுப்பிட்டி, இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம் வரை அழைத்து வரப்பட்டு மாணவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.தொடர்ந்து தமிழர் பொங்கல் இடம்பெற்றது. தமிழ் சிங்கள பண்பாட்டு குடில்கள் திறந்து வைக்கப்பட்டன.இதில் கூட்டுறவு பிரதி அமைச்சரும், வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான்  உப்பாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட அரசியல் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள், வட மாகாண அதிகாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், மக்கள் என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனரபிற்பகல் வரை கலைநிகழ்வுகளாக  பாரம்பரிய விளையாட்டுக்களான கிறீஸ்கம்பம் ஏறுதல், விநோத உடை நிகழ்வுகள், தலையணைச்சண்டை, கிட்டி இழுத்தல், முட்டி உடைத்தல், கிளித்தட்டு (ஆண், பெண்), கயிறு இழுத்தல் (ஆண், பெண்), யானைக்கு கண்வைத்தல், கிடுகு பின்னல், சாக்கோட்டம், தேசிக்காய்க்கரண்டி, போர்த்தேங்காய் அடித்தல் போன்றனவும் இடம்பெற உள்ளதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் விற்பனைக் கூடங்களுடன் மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை சிறப்பிக்கவுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement