• May 06 2024

தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக வடமாகாணம் மாறவேண்டும்...! வடக்கு ஆளுநர்...!

Sharmi / Feb 23rd 2024, 2:35 pm
image

Advertisement

உல்லாசத் துறை மூலமாக தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக வடமாகாணம் மாறவேண்டுமென  வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கரவெட்டி பிரதேச சபையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உல்லாசத்துறை என்பது பிரதேச சபைகளுக்குரியது. திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பது மாத்திரமே மாகாண சபையின் பணியாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் அதனூடாக வருமானங்களை பெற்றுக்கொள்வதும் பிரதேச சபைகளின் கடமை.

அதேவேளை,  எதிர்காலத்தில் இந்த மாகாணம் தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக பிரதேச சபைகளாக மாவட்டங்களாக மாற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஒரு காலகட்டத்திலே இந்த நாட்டிலே தலைநிமிர்ந்து நின்ற சமுதாயம் மற்றையவர்களுக்கு வாழ்ந்து காட்டிய ஒரு சமுதாயம் இன்று அதை மீண்டும் இந்த நாட்டிற்கு உலகத்திற்கு நிரூபித்து காட்டவேண்டும் என்பது தான் எங்களது எதிர்பார்ப்பு.

சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற வியாபார ஆக்கிரமிப்புக்குள்ளே எங்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கின்றோம்.

அதாவது, நாம் இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை விற்கின்ற விற்பனை முகவர்களாக நாங்கள் மாறிக்கொண்டிருக்கின்றோம்.

எனவே, உற்பத்தியாளர்களாக இருக்கவேண்டியவர்கள் விற்பனை முகவர்களாக மாறிக்கொண்டிருப்பதால்தான் இன்று எங்களால் எமது பிரதேசத்தை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் முடியாதவர்களாக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.



தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக வடமாகாணம் மாறவேண்டும். வடக்கு ஆளுநர். உல்லாசத் துறை மூலமாக தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக வடமாகாணம் மாறவேண்டுமென  வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.கரவெட்டி பிரதேச சபையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,உல்லாசத்துறை என்பது பிரதேச சபைகளுக்குரியது. திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பது மாத்திரமே மாகாண சபையின் பணியாக காணப்படுகின்றது.இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் அதனூடாக வருமானங்களை பெற்றுக்கொள்வதும் பிரதேச சபைகளின் கடமை.அதேவேளை,  எதிர்காலத்தில் இந்த மாகாணம் தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்கின்ற ஆளுமை மிக்க ஒரு மாகாணமாக பிரதேச சபைகளாக மாவட்டங்களாக மாற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.ஒரு காலகட்டத்திலே இந்த நாட்டிலே தலைநிமிர்ந்து நின்ற சமுதாயம் மற்றையவர்களுக்கு வாழ்ந்து காட்டிய ஒரு சமுதாயம் இன்று அதை மீண்டும் இந்த நாட்டிற்கு உலகத்திற்கு நிரூபித்து காட்டவேண்டும் என்பது தான் எங்களது எதிர்பார்ப்பு.சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற வியாபார ஆக்கிரமிப்புக்குள்ளே எங்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கின்றோம்.அதாவது, நாம் இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை விற்கின்ற விற்பனை முகவர்களாக நாங்கள் மாறிக்கொண்டிருக்கின்றோம்.எனவே, உற்பத்தியாளர்களாக இருக்கவேண்டியவர்கள் விற்பனை முகவர்களாக மாறிக்கொண்டிருப்பதால்தான் இன்று எங்களால் எமது பிரதேசத்தை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் முடியாதவர்களாக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement