• Oct 03 2024

ஒன்பது மாகாணங்களில் விட வடக்கின் பொருளாதாரம் முன்னிலை - கே. விக்னேஷ் பெருமிதம்..!!

Tamil nila / Jan 19th 2024, 7:41 pm
image

Advertisement

ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தின் பொருளாதாரம் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் முன்னிலை வகிப்பதாக யாழ்பணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் (CCIY) ஆளுநர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார். 

இன்று யாழ். முற்றவெளியில் இட்ஸம்பெற்ற " வடக்குக்கான நுழை வாயியல்" என்னும் தொனிப்ருளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு நிகழ்வினை நடத்துவது முக்கியமல்ல. நாங்கள் நடத்துகின்ற அந்த நிகழ்விற்கு அந்த நிகழ்வோடு  தொடர்புடையவர்கள் எவ்வளவு தூரம் தங்களுடைய நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். 

அந்த வகையிலே யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது  14 தடவையாக குறிப்பாக 2014 இலிருந்து நடத்திக்கொண்டு வருகின்றோம். 

சில ஆண்டுகள் அதனை நடத்த முடியாமல் போயிருந்தது. ஆரம்ப காலத்தில் மிக மிக மோசமான நிலையில் எங்களினுடைய A 9 பாதை இருந்த பொழுது கூட இந்த நிகழ்வு பல்வேறு வழிகளிலே பொருட்கள் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு தென்பகுதியில் இருக்கின்ற முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களின் ஊக்குவிப்போடு நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தோம். 

இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்து உற்பத்தியாளர்கள், யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தொழிற் தருணங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் இலங்கையில் தேசிய ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது. 

யாழ்பாணத்தினுடைய வர்த்தகப்பரிமாற்றத்திலே ஒரு மிகப்பெரிய ஒரு மாற்றத்தினை குறிப்பாக யாழ்ப்பாண வர்த்தகத் தொழில் துறை மன்றமானது, எங்களினுடைய இலக்குகளில் ஒரு முக்கியமான விடயமாக நாங்கள் எதிர்பார்ப்பது இங்கு ஆரம்பிக்கப்படுகின்ற அல்லது இந்கு வழங்கப்படுகின்ற பொருட்கள், சேவைகள் சர்வதேச தரத்துக்கு ஒப்பான சேவைகளையும், பொருட்களையும், உற்பத்திகளையும் பெற வேண்டும் என்பதில். ஏனென்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும் சர்வதேச வர்த்தகத்தை நோக்கி புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகச்சந்தையை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த  வகையில் எங்களுடைய சேவைகள் மற்றும் உற்பத்திகள் அமையவேண்டும்.  

அந்தவகையில்  நாங்கள் வியாபார ஜாம்பவன்களை இங்கு அழைத்து அவர்களினுடைய வியாபாரத்தந்திரங்கள், அவர்களினுடைய உற்பத்திகள், அவர்களினுடைய வியாபாரங்களில் இணைத்துக்கொள்ளுதல், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், தென்பகுதியில் இருக்கின்ற  ஏற்றுமதியாளர்களை இங்கிருக்கின்ற உற்பத்தியாளர்களோடு அறிமுகப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என நாங்கள் ஒரு பயனான ஒரு செவியை எதிர்பார்த்துத்தான் இந்த நிகழ்வினை நடத்திக்கொண்டிருக்கின்றோம். 

எங்களினுடைய இலக்குக்கு எந்த விதத்திலும் வீண் போகாத வகையிலே இந்த கண்காட்சி மிக சிறந்த அளவிலே உண்மையில் நான் குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகத் தொழில் துறையில் வித்தியாசமான ஒரு பரிணாமத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதையே நான் மிகத் தெளிவாக ஒரு புள்ளிவிபரம் ஊடாக நான் சொல்லிக்கொள்ள முடியும். என்னவென்று சொன்னால் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 9 மாகாணங்களில் வட மாகாணத்தினுடைய பங்களிப்பு வளர்ச்சி விகிதம் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கின்றது. 

இந்த பிரதேசத்தில் வடபகுதியில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாரிய ஒரு வித்தியாசமான ஒரு கோணத்தில் காணப்படுகிறதாக  காணக்கூடியதாக உள்ளது. 

நாங்கள் 2019 ஆம் ஆண்டு வட பகுதியின் தொழில் துறைக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் எங்களினுடைய இலங்கையிலே ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், குறிப்பாக குண்டு வெடிப்புக்கள் covid இரண்டு வருடம் எங்களினுடைய நாட்டினுடைய பொருளாதார ஸ்தீரணமற்ற தன்மை ஆகியவற்றின்  காரணங்களாக நான்கு வருடங்களை எண்களினுடைய வர்த்தகச் சமூகம் இழந்திருக்கின்றது. இந்த நிலையிலே நாங்கள் மிக முக்கியமாக அந்த இரண்டு முக்கியமான விடயங்களை நாங்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதற்குரிய காலப்பகுதியில் எங்களுக்கு தேவையான ஒரு முக்கியமான ஒரு  எங்களினுடைய நாட்டிலே உண்மையில் ஒரு அரசியல் ஸ்தீரணத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு அரசியல் ஸ்தீரணம்  ஏற்படுகின்ற பட்ச்சதில்தான் நாட்டினுடைய பொருளாதார ஸ்தீரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதை தான் ஒவ்வொரு தொழில் அதிபர்களும், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றனர். 

இந்த விடயத்தினை உண்மையில் கடந்த இரண்டு கிழமைக்கு முன் இந்த நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்திலே அவரிடம் கூறியிருந்தேன். அவர் பொறுப்பேற்க முன் எங்களுக்கு தெரியும் இந்த பிரதேசம் , இந்த நாடு இவ்சளவு மோசமான நிலையில் இருந்தது.

குறிப்பாக இந்த வர்த்தக சமூகம் என்ன செய்ய போகிறோம் என்ற நிலையில் இருந்த இந்த நாட்டை மீட்டுக்கொண்டிருக்கின்றார். 

ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.    வடபிராந்திய வர்த்தக சமூகத்தின் சார்பாக அவருக்கு நன்றியை  தெரிவித்திருந்தேன். இவ்வாறு சில முக்கியமான விடயத்தினை இங்கு இருக்கின்ற சமூகத்துக்கும், தொழில் துறை சமூகத்துக்கும் எங்களை சரியான வகையிலே, தேவைக்கு ஏற்ற வகையிலே இந்த கண்காட்சியை பார்க்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு பிரதேசத்தினுடைய ஒரு தொழில் துறை முன்னேற்றத்துக்கு தேவையான அதனை விடயங்களும் உள்வாங்கப்பட்ட வகையிலே அமைக்கப்பட்டிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எமக்கு உதவி செய்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாகாணங்களில் விட வடக்கின் பொருளாதாரம் முன்னிலை - கே. விக்னேஷ் பெருமிதம். ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தின் பொருளாதாரம் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் முன்னிலை வகிப்பதாக யாழ்பணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் (CCIY) ஆளுநர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று யாழ். முற்றவெளியில் இட்ஸம்பெற்ற " வடக்குக்கான நுழை வாயியல்" என்னும் தொனிப்ருளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நிகழ்வினை நடத்துவது முக்கியமல்ல. நாங்கள் நடத்துகின்ற அந்த நிகழ்விற்கு அந்த நிகழ்வோடு  தொடர்புடையவர்கள் எவ்வளவு தூரம் தங்களுடைய நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். அந்த வகையிலே யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது  14 தடவையாக குறிப்பாக 2014 இலிருந்து நடத்திக்கொண்டு வருகின்றோம். சில ஆண்டுகள் அதனை நடத்த முடியாமல் போயிருந்தது. ஆரம்ப காலத்தில் மிக மிக மோசமான நிலையில் எங்களினுடைய A 9 பாதை இருந்த பொழுது கூட இந்த நிகழ்வு பல்வேறு வழிகளிலே பொருட்கள் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு தென்பகுதியில் இருக்கின்ற முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களின் ஊக்குவிப்போடு நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தோம். இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்து உற்பத்தியாளர்கள், யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தொழிற் தருணங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் இலங்கையில் தேசிய ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது. யாழ்பாணத்தினுடைய வர்த்தகப்பரிமாற்றத்திலே ஒரு மிகப்பெரிய ஒரு மாற்றத்தினை குறிப்பாக யாழ்ப்பாண வர்த்தகத் தொழில் துறை மன்றமானது, எங்களினுடைய இலக்குகளில் ஒரு முக்கியமான விடயமாக நாங்கள் எதிர்பார்ப்பது இங்கு ஆரம்பிக்கப்படுகின்ற அல்லது இந்கு வழங்கப்படுகின்ற பொருட்கள், சேவைகள் சர்வதேச தரத்துக்கு ஒப்பான சேவைகளையும், பொருட்களையும், உற்பத்திகளையும் பெற வேண்டும் என்பதில். ஏனென்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும் சர்வதேச வர்த்தகத்தை நோக்கி புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகச்சந்தையை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த  வகையில் எங்களுடைய சேவைகள் மற்றும் உற்பத்திகள் அமையவேண்டும்.  அந்தவகையில்  நாங்கள் வியாபார ஜாம்பவன்களை இங்கு அழைத்து அவர்களினுடைய வியாபாரத்தந்திரங்கள், அவர்களினுடைய உற்பத்திகள், அவர்களினுடைய வியாபாரங்களில் இணைத்துக்கொள்ளுதல், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், தென்பகுதியில் இருக்கின்ற  ஏற்றுமதியாளர்களை இங்கிருக்கின்ற உற்பத்தியாளர்களோடு அறிமுகப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என நாங்கள் ஒரு பயனான ஒரு செவியை எதிர்பார்த்துத்தான் இந்த நிகழ்வினை நடத்திக்கொண்டிருக்கின்றோம். எங்களினுடைய இலக்குக்கு எந்த விதத்திலும் வீண் போகாத வகையிலே இந்த கண்காட்சி மிக சிறந்த அளவிலே உண்மையில் நான் குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகத் தொழில் துறையில் வித்தியாசமான ஒரு பரிணாமத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதையே நான் மிகத் தெளிவாக ஒரு புள்ளிவிபரம் ஊடாக நான் சொல்லிக்கொள்ள முடியும். என்னவென்று சொன்னால் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 9 மாகாணங்களில் வட மாகாணத்தினுடைய பங்களிப்பு வளர்ச்சி விகிதம் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கின்றது. இந்த பிரதேசத்தில் வடபகுதியில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாரிய ஒரு வித்தியாசமான ஒரு கோணத்தில் காணப்படுகிறதாக  காணக்கூடியதாக உள்ளது. நாங்கள் 2019 ஆம் ஆண்டு வட பகுதியின் தொழில் துறைக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் எங்களினுடைய இலங்கையிலே ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், குறிப்பாக குண்டு வெடிப்புக்கள் covid இரண்டு வருடம் எங்களினுடைய நாட்டினுடைய பொருளாதார ஸ்தீரணமற்ற தன்மை ஆகியவற்றின்  காரணங்களாக நான்கு வருடங்களை எண்களினுடைய வர்த்தகச் சமூகம் இழந்திருக்கின்றது. இந்த நிலையிலே நாங்கள் மிக முக்கியமாக அந்த இரண்டு முக்கியமான விடயங்களை நாங்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதற்குரிய காலப்பகுதியில் எங்களுக்கு தேவையான ஒரு முக்கியமான ஒரு  எங்களினுடைய நாட்டிலே உண்மையில் ஒரு அரசியல் ஸ்தீரணத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு அரசியல் ஸ்தீரணம்  ஏற்படுகின்ற பட்ச்சதில்தான் நாட்டினுடைய பொருளாதார ஸ்தீரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதை தான் ஒவ்வொரு தொழில் அதிபர்களும், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த விடயத்தினை உண்மையில் கடந்த இரண்டு கிழமைக்கு முன் இந்த நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்திலே அவரிடம் கூறியிருந்தேன். அவர் பொறுப்பேற்க முன் எங்களுக்கு தெரியும் இந்த பிரதேசம் , இந்த நாடு இவ்சளவு மோசமான நிலையில் இருந்தது.குறிப்பாக இந்த வர்த்தக சமூகம் என்ன செய்ய போகிறோம் என்ற நிலையில் இருந்த இந்த நாட்டை மீட்டுக்கொண்டிருக்கின்றார். ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.    வடபிராந்திய வர்த்தக சமூகத்தின் சார்பாக அவருக்கு நன்றியை  தெரிவித்திருந்தேன். இவ்வாறு சில முக்கியமான விடயத்தினை இங்கு இருக்கின்ற சமூகத்துக்கும், தொழில் துறை சமூகத்துக்கும் எங்களை சரியான வகையிலே, தேவைக்கு ஏற்ற வகையிலே இந்த கண்காட்சியை பார்க்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு பிரதேசத்தினுடைய ஒரு தொழில் துறை முன்னேற்றத்துக்கு தேவையான அதனை விடயங்களும் உள்வாங்கப்பட்ட வகையிலே அமைக்கப்பட்டிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பல்வேறு தரப்பினரும் எமக்கு உதவி செய்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement