• May 22 2026

மஹிந்தவுக்கு அல்ல, இனி அநுரவுக்கே முழு ஆதரவு! அம்பிட்டிய தேரர் அதிரடி

Chithra / May 21st 2026, 11:05 am
image

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து, அவருக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் அறிவித்துள்ளார்.


அத்துடன், தாம் இனிமேல் "ராஜபக்ச நிகாய"  என்பதில் இருந்து முற்றாக விலகிச் செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சந்திப்பின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்துத் தாம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு உறுதியளித்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.


தமது கருத்துக்களைப் பொறுமையுடன் செவிமடுத்ததற்கும், கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக அம்பிட்டிய சுமனரதன தேரர் கூறியுள்ளார்.


நாட்டை நேர்மறையான மற்றும் சாதகமான திசையை நோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட தேரர், ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலம் வரை அவருக்குத் தனது "அதிகபட்ச ஆதரவை" வழங்கவுள்ளதாகவும், "ராஜபக்ஷ நிகாய"விலிருந்து தாம் விலகியிருக்கப் போவதாகவும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.


மஹிந்தவுக்கு அல்ல, இனி அநுரவுக்கே முழு ஆதரவு அம்பிட்டிய தேரர் அதிரடி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து, அவருக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் அறிவித்துள்ளார்.அத்துடன், தாம் இனிமேல் "ராஜபக்ச நிகாய"  என்பதில் இருந்து முற்றாக விலகிச் செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தச் சந்திப்பின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகள் மற்றும் கவலைகள் குறித்துத் தாம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு உறுதியளித்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.தமது கருத்துக்களைப் பொறுமையுடன் செவிமடுத்ததற்கும், கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக அம்பிட்டிய சுமனரதன தேரர் கூறியுள்ளார்.நாட்டை நேர்மறையான மற்றும் சாதகமான திசையை நோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட தேரர், ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலம் வரை அவருக்குத் தனது "அதிகபட்ச ஆதரவை" வழங்கவுள்ளதாகவும், "ராஜபக்ஷ நிகாய"விலிருந்து தாம் விலகியிருக்கப் போவதாகவும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement