• Nov 21 2024

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு! samugammedia

Tamil nila / Dec 7th 2023, 10:17 pm
image

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி இவ்வாறு முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் மண்மேடு சரிந்த இடத்தில் மேலும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பிரதான வீதியில் மண் அகற்றும் பணி சற்று தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை  தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும்.

இதேவேளை, தெனியாய இரத்தினபுரி வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அணில்கந்த பகுதியில் 86 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வீதியில் மண் மேடு சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு samugammedia கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளது.வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி இவ்வாறு முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.மேலும் மண்மேடு சரிந்த இடத்தில் மேலும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பிரதான வீதியில் மண் அகற்றும் பணி சற்று தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை  தெரிவிக்கின்றனர்.இதற்கமைய, கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும்.இதேவேளை, தெனியாய இரத்தினபுரி வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.அணில்கந்த பகுதியில் 86 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வீதியில் மண் மேடு சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement