• Dec 14 2024

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு

Chithra / Nov 11th 2024, 3:52 pm
image

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிகத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

என்றாலும், தற்போது அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும் பின்வரும் காரணங்களுக்காகவும் முறையான கடிதங்கள் மூலம் உரிமம் பெற்ற அனைவருக்கும் அறிவிக்க போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை 2024.11.04 முதல் 2024.11.21ஆம் திகதி வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், மேற்படி கால நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதி பெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும்.

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் அறிவிப்பு தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிகத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.என்றாலும், தற்போது அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும் பின்வரும் காரணங்களுக்காகவும் முறையான கடிதங்கள் மூலம் உரிமம் பெற்ற அனைவருக்கும் அறிவிக்க போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை 2024.11.04 முதல் 2024.11.21ஆம் திகதி வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.மேலும், மேற்படி கால நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதி பெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement