• Nov 22 2024

கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை

Tharmini / Nov 11th 2024, 4:04 pm
image

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு .

பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. 

வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்ற பலரிடம் நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதன் மூலம் பல நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மாவட்ட தொற்றா நோய்ப்பிரிவின் வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.  

எதிர்வரும் 15ம் திகதிவரை உலக நீரிழிவு வாரமாக பிரகடனப்படுத்தி நோயாளர்கள் இனங்காணப்படவுள்ளனர்.

கண்டாவளை வைத்திய அதிகாரி பிரிவில் குறித்த வாரத்தில் 8.30 மணி வரை மக்கள் பரிசோதனையை மேற்கொண்டு தமது நீரிழிவு நோய் நிலைமையை அறிந்து கொள்ள முடியும்.





கிளிநொச்சியில் நீரிழிவு நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நோயாளர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு .பரந்தன் பகுதியில் கண்டாவளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பேருந்துக்காக காத்து நின்ற பலரிடம் நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் பல நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மாவட்ட தொற்றா நோய்ப்பிரிவின் வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.  எதிர்வரும் 15ம் திகதிவரை உலக நீரிழிவு வாரமாக பிரகடனப்படுத்தி நோயாளர்கள் இனங்காணப்படவுள்ளனர்.கண்டாவளை வைத்திய அதிகாரி பிரிவில் குறித்த வாரத்தில் 8.30 மணி வரை மக்கள் பரிசோதனையை மேற்கொண்டு தமது நீரிழிவு நோய் நிலைமையை அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement